Today Rasipalan Tamil - May 01 Raspalan

இன்றைய ராசிபலன் (01 மே 2022) : Today Rasipalan Tamil, May 01

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன்

Aries Today Rasipalan |  மேஷம் இன்றைய ராசிபலன்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும் பெண்களுக்கு இனிய நாள் ஆகும் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் கணவன் மனைவி ஒற்றுமை அந்நியோன்னியமாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

Taurus Today Rasipalan | ரிஷபம் இன்றைய ராசிபலன்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும் உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய நாள் ஆகும்.

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு மற்றும் தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைத்தல் போன்ற மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் செல்லும்.

Gemini Today Rasipalan | மிதுனம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமையும் சுய தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மன அழுத்தம் சற்று கூடுதலாகும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கல்வித்திறன் பளிச்சிடும் கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருக்கும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

Cancer Today Rasipalan | கடகம் இன்றைய ராசிபலன்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை.

பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் சற்று காலதாமதம் ஆகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு காலதாமதமானாலும் வெற்றி கிடைக்கும். தன வரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Leo Today Rasipalan | சிம்மம் இன்றைய ராசிபலன்

நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக உள்ளது உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள் குடும்பத்தில் பேச்சுவார்த்தையில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

உடன்பிறந்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் நண்பர்களால் ஆதாயம் உண்டு கல்வியை முடித்து வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வெளியூர் வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.

Virgo Today Rasipalan | கன்னி இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். திறம்பட சமாளித்து நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன்கள் கிடைப்பது சற்று காலதாமதம் ஆகும்.

குழந்தைகளால் செலவுகள் சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு. வீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.

Libra Today Rasipalan | துலாம் இன்றைய ராசிபலன்


அன்பர்களுக்கு இன்றைய நாள் பல புதிய வாய்ப்புகளை அள்ளித் தரும் இனிய நாள் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது ஆகிய இவை வெற்றி தருவதாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமையும் இனிய தருணம் ஆகும் விசா தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் வாகன வகையில் சுபச் செலவுகள் உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

Scorpio Today Rasipalan | விருச்சிகம் இன்றைய ராசிபலன்


நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். கல்விக்காக சற்று கூடுதல் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது என்றாலும் இவைகளால் எதிர் காலம் சிறப்பாக அமையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் அவை தொடர்பான காரியங்களை தற்போது துவக்கலாம். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல தீர்வுக்கு வருவீர்கள்.

Sagittarius Today Rasipalan | தனுசு இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு விருந்தினர் வருதல் இவைகளால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.

குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது வாகனங்கள் வாங்குவது இவற்றிற்காக கடன் பெற வேண்டியது வரலாம்.

Capricorn Today Rasipalan | மகரம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இந்த நாள் சிறப்பானதொரு நாளாகவே அமையும் கணவன் மனைவி உறவு மேம்படும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை உண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பணவரவு இருந்தாலும் செலவினங்கள் சற்று கூடுதலாக தெரியும்.

உடல் நலம் சீராக இருந்துவரும் வெளிநாடு வெளியூர் போன்றவற்றில் உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

Aquarius Today Rasipalan | கும்பம் இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.

சகோதர சகோதரிகளுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறைவதற்கான நாள் உயர்கல்வி கற்ற கொண்டிருப்பவர்கள் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் ஆகியோருக்கு பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும் குடும்பத்தில் அமைதி தவழும்.

Pisces Today Rasipalan |  மீனம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இந்த நாள் ஒரு நல்ல நாளாகவே இருக்கிறது. தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் எதிர்பார்த்த பணவரவு உண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அனுகூலம் உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தாங்கள் விரும்பத்தக்க இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் ஒரு சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *