தற்போது ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் போடப்பட்டு வருகின்றன.தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு தான் முதலில் கட்டுப்பாடுகள் போடப்பட்ட வருகிறது. இரவு லாக்டவுனால் இரவு காட்சிகள் திரையிட முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
அதனால் படங்களின் வசூல் அதிகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த காரணத்திற்காக பல ஹிந்தி படங்கள் ரிலீஸை தள்ளி வைத்து இருக்கின்றன. இந்நிலையில் ராஜமௌலி இயக்கி இருக்கும் பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர் படமும் 7ம் தேதியில் இருந்து தள்ளிப்போகிறது என வதந்தி பரவியது.
அது உண்மை இல்லை என ராஜமௌலி விளக்கம் கொடுத்து இருக்கிறார். ராஜமௌலி தன்னிடம் அதை சொன்னதாக பிரபல பாலிவுட் சினிமா விமர்சகர் தரன் ஆதர்ஷ் தெரிவித்து இருக்கிறார்.