மாறுவேஷத்தில் தியேட்டர் வந்த சாய்பல்லவி | ஷியாம் சிங்கா ராய்

நடிகர்

நானி

நடிகை

சாய் பல்லவி

இயக்குனர்

ராகுல் சன்கிரிடியான்

இசை

மிக்கி ஜே.மெயர்

ஓளிப்பதிவு

சனு ஜான் வர்கீஷ்

நாயகன் நானி (வாசு தேவ் காண்ட்டா) குறும்படம் இயக்கவேண்டும் என்ற கனவுவோடு பயணிக்கும் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். பல கனவுகளோடு அவனுடைய கதையை இயக்குவதற்கான வேலையை துவங்குகிறார். சொந்த முயற்சியில் அவனுடைய கதைக்காக பல நடிகர், நடிகைகளை தேர்வு செய்தும், ஒரு வழியாக குறும்படத்தை முடித்து விடுகிறார். 
 
இதற்கிடையில் குறும்படத்தின் படப்பிடிப்பில் நானிக்கு தலையில் அடிப்பட்டு சிறிய காயம் ஏற்படுகிறது. பின்பு தயாரிப்பாளரிடம் முழுநீள படத்திற்கு கதை சொல்லி ஒப்புதல் வாங்கி விடுகிறார். அந்த படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகிறது.
பிறகு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அந்த படத்தை இந்தி மொழியில் மாற்றம் செய்ய திட்டமிடுகின்றனர். அப்பொழுது இந்த கதை எழுத்தாளர் ஷியாம் சிங்கா ராயின் கதை, இதனை இயக்குனர் எந்த அறிவிப்பும் இல்லாமல் இயக்கிவிட்டதாக குற்றம்சாட்டி ஒரு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது.
 
 
இறுதியில் நானி இயக்கிய கதை திருட்டு கதையா? சொந்த கதையா? வழக்கை எப்படி நானி சமாளித்தார்? நானிக்கும் ஷியாம் சிங்கா ராய்க்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை. 
 
முதல் பாதியில் வாசுதேவ் காண்ட்டாவாகவும் இரண்டாம் பாதியில் ஷியாம் சிங்கா ராயாகவும் நானி அவருடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பெரிய வரவேர்பை பெற்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் 60, 70களில் வரும் தோற்றத்தை இயல்பாக வெளிப்படுத்திருக்கிறார். சாய் பல்லவியும், கீர்த்தி ஷெட்டியும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சாய் பல்லவி இந்த படத்தில் அவருடைய நடன திறமையை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதையின் தேர்வும் திரைக்கதையின் வடிவமும் இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. இயக்குனர் ராகுல் சன்கிரிடியான் தனது பணியை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு இருந்தாலும் படம் சரியான பாதையில் நகர்ந்து சுவாரசியம் கூட்டுகிறது. 
 
படத்தில் சனு ஜான் வர்கீஷின் ஒளிப்பதிவு கண்களுக்கு அழகான காட்சியளிக்கிறது. குறிப்பாக 60களில் தோன்றும் காட்சிகள் மிகவும் நேர்த்தியாக காட்சிபடுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சனு ஜான் வர்கீஷ். மிக்கி ஜே.மெயரின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இத்திரைப்படத்தினை காண்பதற்கு சாய்பல்லவி மாறுவேஷத்தில் தியேட்டருக்கு  வந்திருக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
 
வீடியோவை பார்க்க கீழே உள்ள புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *