sivakarthikeyen vival soap ad

தளபதி முதல் சிவகார்த்திகேயன் வரை ஆரம்ப காலத்தில் நடித்த சூரமொக்கையான விளம்பரங்கள்

  • இந்த சோப் போட்டா கருமையான முகம், பளிச்னு ஆகிடும், 
  • இந்த டீயில ஊட்டச்சத்து இருக்கு, 
  • இந்த வெளிநாட்டு குளிர்பானம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குது, 
    இந்த குளிர்பானம் குடிச்சா கலாட்டா பண்ண தோணும், லவ் பண்ண தோணும், அப்பாவே பொண்ண ஹீரோகூட அனுப்பி வைக்க தோணும்.

விளம்பரத்துக்காக இப்படி என்னன்ன சொல்லி வைச்சிருக்காங்க பாருங்களேன்

விஜய்

 

thalappathy josalukkas ads

கிட்டத்தட்ட கோலாவுக்கும், ஜோஸ் ஆலுகாஸ்க்கும் நம்ம விஜய்ண்ணா ப்ராண்ட் அம்பாசிடரோனு தோணுற மாதிரி பலவிதமான விளம்பரங்கள் நடிச்சிருக்கார். அதுல ஜோஸ் ஆலுகாஸ் விளம்பரங்கள் பேமிலி செண்டிமெண்ட்னா, கோலா விளம்பரம் பக்கா மாஸ். காத்ரினாகூட கலக்கலா டான்ஸ்ல தொடங்கி பத்ரி படம் வரைக்கும் கோலா விளம்பரத்தை கொண்டு வந்தார், விஜய்ணா. ஆனா, குளிர்பானம் வாங்குங்கனு சொல்ற விளம்பரத்துல ஒரு பொண்ணுக்கு ப்ரபோஸ் பண்ண போவாரு விஜய்ணா, அப்போ அவங்க அப்பா வந்துடுவாரு. அதை பார்த்து பொண்ணு பதற, விஜய்ணா கூலா ஒரு கோலானு கொடுப்பாரு. அதை பார்த்ததும் அவங்க அப்பா வாங்கி குடிச்சிட்டு, மனசு மாறி அந்த பொண்ண விஜய்ணா கூடவே டியூசன் படிக் அனுப்பிடுவாரு.  ஒரு கோலா குடிச்சா அப்பா, தன்னோட பொண்ண யாருன்னு தெரியாத பையன்கூட அனுப்பிடுவாருனு விளம்பரத்துல காட்டுனது எல்லாம் அபத்ததோட உச்சம்னே சொல்லலாம். அதே மாதிரி இது தங்கமான உறவுனு ஜோஸ் ஆலுகாஸ் விளம்பரத்துல school principal, school பெல் அடிக்குறவரை எட்டி உதைக்குற மாதிரி சீன் வரும். நகைக்கடை விளம்பரத்துக்கு எதுக்கு எட்டி உதைக்கணும்ங்குறதெல்லாம் அண்ணா கவனிச்சாங்களானு தெரியலை. என்னண்ணே பண்ணி வச்சிருக்கீங்க?

சிம்ரன்

simran fanta ad images

இவங்களும் சுமார் 30 விளம்பரங்களுக்கு மேல நடிச்சிருக்காங்க. அதுல உச்சகட்ட அபத்தமான ரெண்டு விளம்பரங்கள் இருக்கு. முதல்ல குர்குரே விளம்பரத்துல வயசான பெரியவரை வீல்சேர்ல உட்கார வச்சு சிம்ரன் தள்ளிக்கிட்டு வருவாங்க. அப்போ பக்கத்தில தக்காளி விற்கிற பொண்ண பார்த்து அந்த நபர் சைட் அடிப்பார். அந்த பொண்ணும் அவரைப் பார்த்து சிரிக்கும். அதைப் பார்த்த சிம்ரன் குர்குரே பாக்கெட்டை அவங்க கிட்ட கொடுப்பாங்க. அதை கடிச்ச உடனே பெரியவர் வீல் சேரோட மின்னல் வேகத்துல அந்த பொண்ணுகிட்ட போய் சேட்டை பண்ணுவாரு. குர்குரே சாப்பிட்டா வயசானவங்க கூட… இளமையா மாறிடுவாங்கனு சொல்ல வர்றாங்க. இது பரவாயில்லை, அடுத்து Fanta ஒரு ட்ராபிக் ஜாம்ல சிம்ரன் மாட்டிப்பாங்க. அப்போ பக்கத்துல ஒரு Fanta கடை இருக்கும். 5 ரூபாயை கடையில சுண்டிவிட்டு கார் பேனட்ல ஏறி நின்னுகிட்டு, இடுப்பை காட்டி, dress-ஐ தொடை வரைக்கும் தூக்கி காட்டி கடைக்காரர்கிட்ட சைகைல கேட்பாங்க. அந்த கடைக்காரர் என்னனு தெரியாம முழிப்பாரு. உடனே கடைப்பையன் Fanta-வானு கேட்பான். இந்த ரெண்டு விளம்பரங்களும் அபத்தத்தின் உச்சம்.  என்ன சிம்ரன் இதெல்லாம்?

சிவகார்த்திகேயன்

கடந்த 12 வருஷத்துக்கு முன்னால அப்போ சின்னத்திரை பிரபலமா இருந்த சிவகார்த்திகேயனும், நடிகை த்ரிஷாவும் விவல் சோப் விளம்பரத்துல நடிச்சிருந்தாங்க. அப்போ சோப் போட்டா முகம் பளிச்னு ஆகிடும்ங்குறதை மையக்கருத்தா வச்சு அதை எடுத்துருந்தாங்க. இதில் வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பட்டப் பெயர். குண்டு மல்லிகா, குட்டை கோமளா, பளிச் பானு, நெட்டை மேகலா, டல் திவ்யானு கல்லூரி நண்பர்கள் உருவகேலி செய்துகிட்டிருக்கிற மாதிரி காட்சி வரும். காலேஜ்ல நடக்கிற சாதாரண கிண்டல் மாதிரி அப்போ நெனைச்சிருப்பாங்க. ஆனா, இப்போ அப்படிலாம் பண்ணா… மூச்!

த்ரிஷா!

trisha vival soap ad

அடுத்ததா நம்ம அக்கா த்ரிஷா. ஆரம்பக்காலத்துல மாடலா தொடங்கின இவங்களோட கேரியர் சினிமாவுல இன்னைக்கும் உச்சத்துல இருக்கு.  ஆரம்பக்கட்டத்துல கூல்ட்ரிங்ஸ், சாக்லேட், டீ தூள், திருப்பால்னு தொடங்கி இப்போ வரைக்கும் விளம்பரங்கள்ல நடிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. திருப்பால் விளம்பரத்துல ஒரு டிவிகாரர் பேட்டி எடுக்க தன்னோட குரங்கு பொம்மையோட உட்கார்ந்திருப்பார். அப்போ எதிர்ல த்ரிஷா உட்கார்ந்திருப்பாங்க. அதுல அந்த பொம்மை பேசுற மாதிரி ஒரு வசனம் வரும்.  அதை பார்த்த உடனே குரங்கு பொம்மை ‘காலை பாரு களையில்லாத கால்’, ஒரே பித்த வெடிப்பு’னு பொம்மைக்கு வாய்ஸ் இருக்கும். பேட்டி கொடுக்க வர்ற பிரபலங்களோட கால்ல பித்தவெடிப்பு இருந்தா பொம்மை த்ரிஷாகிட்ட இண்டர்வ்யூ கேட்காதாம். என்ன கொடும சார் இது?

அசின்

asin old ad images

பட்டு சேலை, மிரிண்டா, ஆடைகள் என அதிகமான விளம்பரப் படங்களில் நடித்தவர் அசின். ஆனால் அவர் நடித்த மற்ற விளம்பரத்தில் இருந்தவற்றைக் கூட சகிச்சுக்கலாம். ஆனா fairever விளம்பரம் அபத்தத்தின் உச்சம். அந்த விளம்பரத்தில் தான் அழகா இருக்க காரணம் இந்த க்ரீம்தான்னு சொல்வாங்க. 4 வாரத்துல சிவப்பழகு நிறம் வந்திடும்னும் சொல்வாங்க. இங்க இவங்க சொல்ல் வர்றது, வெள்ளை நிறத்தை அழகு, கருப்பு நிறம் அழகில்லைங்குற கருத்துதான். இதுதான் விளம்பரப் படங்களோட அபத்தத்தின் உச்சம். இதே மாதிரிதான் இவங்க நடிச்ச Fair & lovely விளம்பரமும் இருக்கும். 4 வாரம் இல்ல, 4 வருஷம் முகத்துக்குப் போட்டாக்கூட வெள்ளையாகாது அப்டிங்குறதுதான் சோகம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *