Ajith in Sudha Kongara Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் 61ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அஜித்.
அதற்கு அடுத்ததாக அஜித் கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் ஹீரோ யாருன்னு அறிவிக்கப்படாமல் இருந்தது. சூர்யா தான் இந்த படத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அஜித் தான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் படத்தில் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். எனவே இப்படத்தில் அஜித் நடிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.