Thalapathy 66 Updates : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக தளபதி விஜய் நேற்று சன் டிவியின் அளித்த பேட்டி ஒளிபரப்பானது. இதில் தளபதி அறுபத்தி ஆறு படம் குறித்து கேட்க இது தெலுங்கு படம் இல்லை என்னுடைய மற்ற படங்களை போன்ற தமிழ் படம் தான். மற்ற பாடல்கள் அதே சமயத்தில் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டது போல இந்த படமும் டப்பிக் படமாக தான் தெலுங்கில் வெளியாகும் என கூறியுள்ளார்.